சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான பிடிவாரண்டுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
பிரபல நடிகை ஒருவர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு கண்டனம் தெரிவித்து கடந்ஹ 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கம் கண்டனக்கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சூர்யா, சரத்குமார், சத்யராஜ், அருண்விஜய், விஜயகுமார், சேரன், விவேக், ஸ்ரீப்ரியா ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.
இதனால் இதுகுறித்து ரசாரியா என்பவர் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு மேற்கண்ட 8 நடிகர்களும் தொடர்ந்து பலமுறை ஆஜராகாததால் அவர்களுக்கு சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சூர்யா உள்பட 8 நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை உதகை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் உதகை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து தற்போது உத்தரவிட்டுள்ளது.