சட்டவிரோத குடியுறுப்புகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு. மதுராவில் பயங்கர கலவரம். 24 பேர் பலி

சட்டவிரோத குடியுறுப்புகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு. மதுராவில் பயங்கர கலவரம். 24 பேர் பலி
violence
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா நகரில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக 24 பேர் பரிதாபமாக பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்கு உ.பி.அரசின் அலட்சியமே காரணம் என மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த கலவரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு மதுரா நகர பிராந்திய ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளளார். சம்பவ இடத்துக்கு போலீஸ் டிஜிபி ஜவேத் அகமது, உள்துறை முதன்மைச் செயலாளர் தெபாசிஷ் பாண்டா ஆகியோர் விரைந்துள்ளதால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த பகுதியில் அமைதி திரும்பி வருவதாகவும் கூறபப்டுகிறது.

இந்த கலவரம் குறித்து மதுராவின் சட்டம் – ஒழுங்கு ஐ.ஜி. ஹெச்.ஆர்.சர்மா கூறும்போது, “மதுரா நகரின் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்து. அதனையடுத்து சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த 3000-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். முதலில் போலீஸார் தடுப்புகளாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் கலவரக்காரர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மதுரா நகர எஸ்.பி. முகுல் துவிவேதி, ஃபரா காவல் நிலைய அதிகாரி சந்தோஷ்குமார் ஆகியோர் என அடையாளம் தெரியவந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர்” என்று கூறினார்.

மதுரா கலவரத்தில் உயிரிழந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினர்களுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply