மதுரை ஆதினம் கவலைக்கிடம். உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அதீவிரம்

மதுரை ஆதினம் கவலைக்கிடம். உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அதீவிரம்

அரசியல் மற்றும் ஆன்மீகம் என இரண்டு துறையிலும் ஈடுபட்டு வந்த மதுரை ஆதீனம் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைவ நாயன்மார்களில் ஒருவரான மாணிக்க வாசகர் தோற்றுவித்த மதுரை ஆதீனம் கடந்த பல ஆண்டுகளாக மதுரையில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சைவ சமய பீடங்களில் ஒன்றாக விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் தற்போதைய தலைமை பீடாதிபதியாக அருணகிரிநாதர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆதீனத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடவும் தொடர்ந்து சிரமப்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையை தொடர்ந்தனர்.

ஆயினும் நேற்று மாலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளிவந்ததால் அவருடைய பக்தர்கள் கவலையில் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நியமித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply