விஜய் நடித்த கத்தி’ மற்றும் பிரவீண் காந்தி இயக்கிய ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களை தடை செய்ய கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ் கரண் தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்றும், . இதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பல தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பிரவீன் காந்தி இயக்கிய ‘புலிப்பார்வை’ திரைப்படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் தடை செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்றூ விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஒரு படம் தணிக்கையான ஆன பிறகு அதில் தலையிட முடியாது என்றும், எனவே இந்தப்படங்களுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.