பதிவுத்திருமணம் செய்யும் காதலர்களுக்கு கடிவாளமா? மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

marriage 1காதல் திருமணம் செய்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடந்தான் திருமணம் செய்ய வேண்டும். பதிவுத்திருமணங்கள் செய்பவர்கள் கண்டிப்பாக பெற்றோருடன் தான் வரவேண்டும் என சட்டம் இயற்றவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. திருமணங்கள் செய்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்றும் இதில் சட்டம் இயற்றி கடிவாளம் போட முடியாது என்றும் கூறிவிட்டது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்0″ தமிழகத்தில் சமீப காலமாக காதல் திருமணங்கள் அதிகளவு நடைபெறுகின்றது. இவற்றில் பெரும்பாலானவை கலப்புத் திருமணம் தான்.

இந்து திருமணச் சட்டப்படி, பெண்ணின் திருமண வயது 18, ஆணுக்கு 21 ஆக உள்ளது. இந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள், 2 அல்லது 3 மாதங்களிலேயே விவா கரத்து செய்வதும் அதிகரித் துள்ளது. இதுபோன்ற நிகழ்வு களைத் தடுக்க அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில்கள், பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்யும் போக்குக்கு கடிவாளமிட வேண்டும்.

பதிவாளர் அலுவலகங்கள், கோயில்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு திருமணம் செய்வதற்காக வருவோர் பெற்றோருடன் வர வேண்டும், அவர்களது சம்மதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் திருமணத்துக்கு அனு மதிக்க முடியும் என தமிழக காவல்துறை இயக்குநர், பதிவுத்துறை ஐ.ஜி மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு சுற்றறிக்கை அனுப்பிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவின் கருத்துக்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளில் அதுவும் ஒன்று. அதைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்”

Leave a Reply