மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சாதனை!

3660071716_a2793b325e_o

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கட்டடங்கள், கடைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை செலுத்தாதோர் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டதால், மொத்த நிலுவை இரண்டு கோடியே ஆறு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயில், ஒரு கோடியே 71 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்து கோயில் நிர்வாகம் சாதனை படைத்தது.இக்கோயில் மற்றும் 22 உப கோயில்களின் கட்டடங்கள், கடைகளை வாடகைக்கு எடுத்து பலர் தொழில் நடத்தி வருகின்றனர். இதில் சிலர் வாடகையை செலுத்தாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்தனர். நிலுவை வாடகையை வசூலிக்க கோயில் இணை கமிஷனர் நடராஜன் நூதன முறையை கையாண்டார்.வாடகை நிலுவைதாரர்களின் பெயர், நிலுவை தொகை குறித்து 2014 ஜூலையில் பட்டியல் வெளியிட்டார்.

பக்தர்கள் பார்வையில்படும்படி கோயில் முன், வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர், நிலுவை தொகையை குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைத்தார். இதையறிந்த பலர் உடனடியாக நிலுவை தொகை செலுத்தியதால் அறிவிப்பு பலகையில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த நிலுவையில் இருந்த இரண்டு கோடியே ஆறு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயில், ஒரு கோடியே 71 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்து கோயில் நிர்வாகம் சாதனை படைத்தது. வசூலாகாத 35 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் பலரை காணவில்லை. அக்கடைகள் டெண்டர் மூலம் புதியவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது

Leave a Reply