சமூக விலகலை மறந்து கோவில் காளை இறுதி ஊர்வலத்திற்கு சென்றவர்கள் மீது வழக்கு

சமூக விலகலை மறந்து கோவில் காளை இறுதி ஊர்வலத்திற்கு சென்றவர்கள் மீது வழக்கு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரை அருகே உள்ள முடுவார்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கோயில் காளை ஒன்று திடீரென இறந்து விட்டதை அடுத்து இந்த காளையில் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர்

சமூக விலகலை மறந்து 144 தடை உத்தரவையும் மதிக்காமல் ஊர்வலமாக சென்ற இந்த கிராமத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கோவில் காளை மற்றும் ஜல்லிக்கட்டு காளை டீரென மறைந்தது சோகமான விஷயம்தான் என்றாலும் அதற்காக அரசின் சட்ட திட்டத்தை மறந்து இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

Leave a Reply