குஷ்புவின் பாரத மாதா பேனர். குஷ்பு மீது வழக்கு பாயுமா?

kushbooநடிகை குஷ்பு அரசியலுக்கு வருவதற்கு முன்பும், அரசியலுக்கு வந்த பின்பும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி அதன்பின்னர் வாங்கி கட்டிக்கொள்வது வழக்கம். குஷ்புவுக்கு கோவில், குஷ்பு இட்லி, கற்பு குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து, திருமணத்திற்கு முன்பே செக்ஸ் போன்றவை குஷ்புவின் சில சர்ச்சை சம்பவங்கள்.

இந்நிலையில் குஷ்பு தற்போது அமைதியாக இருந்தாலும், அவர் இருக்கும் கட்சி அவரை வம்பில் மாட்டிவிட துடித்துக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.

இந்நிலையில், பாரத மாதாவாக குஷ்பூவை சித்தரித்து மதுரை காங்கிரஸ் தொண்டர்கள் வைத்த விளம்பர பேனர் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, உத்தங்குடி பகுதி இருபத்தி எட்டாவது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் குடியரசு தின வாழ்த்து சொல்லி வைக்கப்பட்ட பேனரில், இந்தியா வரைபடத்திற்குள், தேசியகொடியுடன் சிங்கத்தின் மேல் பாரத மாதாவாக குஷ்பூ இருப்பதுபோல் சித்தரித்து வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் பா.ஜ.க. நிர்வாகி ஹரிகரன் என்பவர், இந்த பேனர் பாரத மாதாவை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என்றும் இந்த பேனர் வைக்க காரணமாக இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த பேனர் அகற்றப்பட்டாலும் நடவடிக்கை வேண்டுமென்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து வற்புறுத்த நேற்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குஷ்பூவையும் சேர்ப்பார்களா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. எப்படியோ இந்த வழக்கின் மூலமாக மீண்டும் குஷ்பூ சர்ச்சைக்குள் வந்து விட்டார்.

Leave a Reply