10 ரூபாய் மேகி கள்ள மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு விற்பனை. திடுக்கிடும் தகவல்

maggiஅளவுக்கு அதிகமாக ரசாயன பொருள் கலந்திருப்பதால் சமீபத்தில் மேகி உணவுபொருளுக்கு தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தடைவிதித்தன. ஆனால் பொதுமக்கள் இந்த தடையை ஏற்றுக்கொண்டதுபோல் தெரியவில்லை. அரசு தடைவிதித்தாலும், தொடர்ந்து இந்த உணவை சாப்பிடவே விரும்புவதாக கூறப்படுகிறது. குழந்தைகள் விரும்புவது, எளிதில் தயாராவது போன்ற காரணங்களால் மேகியின் விற்பனையை தடுக்க முடிந்த அரசு அதை மக்களின் மனதில் இருந்து தடுக்க முடியவில்லை.

தடை செய்யப்பட்ட இந்த  மேகி நூடுல்ஸ் பாக்கெட் தெற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேகியின்  சுவைக்கு அடிமையாகிப் போன வாடிக்கையாளர்கள் சிலர் துணிந்து இந்த பாக்கெட்களை வாங்க விரும்புவதாகவும் இதனால் 75 கிராம் பாக்கெட் விலை ரூ.100வரை கள்ள மார்க்கெட்டில் விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வசந்த் விஹார் பகுதியில் ஒரு கடைக்காரர் கூறும்போது, “நாங்கள் என்ன விலை சொன்னாலும் மக்கள் வாங்குவதற்கு தயராக இருக்கும்போது நாங்கள் ஏன் இவற்றை தூக்கி எறிய வேண்டும்” என்று கூறுகிறார்.

கள்ள மார்க்கெட்டில் நூடுல்ஸ் வாங்கியய ராஷ்மி சின்ஹா என்ற பெண் கூறும்போது, “பல ஆண்டுகளாக நாங்கள் மேகி நூடுல்ஸ் சாப்பிடுகிறோம். அதில் உள்ள காரீயத்துக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எங்களிடம் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் அதை சாப்பிட விரும்புகிறேன்’ என்று கூறுகிறார்.

மேற்கு டெல்லியின் ஜானக்புரி பகுதியிலும் இவ்வாறு மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் போன் மூலம் வரும் ஆர்டர்களின் பேரில் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்படுகிறது. பரிச்சயமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இதனை விற்பனை செய்வதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply