இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். பெரும் பரபரப்பு

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். பெரும் பரபரப்பு
earthquake
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் கனமழை வெள்ளத்தால் ஒருபுறம் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது என்றும் நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

Leave a Reply