சனி மகா தோஷத்தில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள்

ba0ba174-0c64-47fe-b181-a05dcfed28e6_S_secvpf

சனியின் நிலைப்பாடு ஒருவரை மிகப்பெரிய வெற்றியாளராகவும் மாற்றும் அல்லது மொத்தமாக கீழே இறக்கி விடவும் செய்யவும். சனி மகாதோஷம் என்பது 19 வருட கால கடின உழைப்பையும் உறுதியையும் கொண்டதாகும். சனி மிகவும் பலவீனமான இடத்தில் இருந்தால், கடுமையான மற்றும் வலியுள்ள நோய்கள், புற்றுநோய், சரும நோய்கள், பக்கவாதம், கீல்வாதம், மெலிவு, செரிமானமின்மை, பைத்தியம், ஆண்மை குறைவு, ஆஸ்துமா, சிறுநீர் தக்கவைப்பு மற்றும் குடல் அடைப்பு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

* சிவலிங்கத்திற்கு திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ருத்ராபிஷேகம் (தண்ணீர் அபிஷேகம்) செய்வது சனி மகாதோஷத்திற்கு ஒரு சிறந்த பரிகாரமாக அமையும்.

* செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அனுமானை வழிபட்டால் சனியை சற்று குளிர்விக்கலாம். மேலும் ஆஞ்சநேயர் மந்திரங்களை தினமும் உச்சரித்தால், சனியால் ஏற்படும் தீமைகள் சற்று குறையும்.

* சிவபெருமானை வணங்கி பூஜைகள் செய்வதன் மூலம் சனி பகவானை குளிர்விக்க முடியும். பச்சை பாலில் கருப்பு எள்ளை கலந்து சிவபெருமானுக்கு தினமும், குறிப்பாக சனிக்கிழமைகளில், அபிஷேகம் செய்தால் சனி பகவானின் தீய தாக்கங்களில் இருந்து சற்று விடுபடலாம்.

* கருப்பு உளுந்தம் பருப்பை ஏழை மக்களுக்கு தானமாக கொடுங்கள். ஓடும் நதியிலும் கொஞ்சம் தூவி விடுங்கள்.

* சனிக்கிழமைகளில் அரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பில் செய்யப்பட்ட கிச்சடியை உட்கொண்டால் சனி பகவானின் அனுகூலத்தை பெற முடியும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

* சனி பகவானுக்கு உகந்த நிறம் கறுப்பாகும். அதனால் நீங்கள் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை குளிர்விக்க, சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.

* “நீலாஞ்சனா சமபாசம் ரவிபுத்ரம் யமக்ராஜம் சாயா மார்த்தாண்டா சம்பூத்தம் தம் நமாமி ஷனைஷ்யரம்” இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் முடிந்த வரை கூறிக்கொண்டே இருங்கள். அதனை 108 முறை படிக்க முயற்சி செய்யுங்கள்.

Leave a Reply