ரூ.150 கோடி முறைகேடு. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது

ரூ.150 கோடி முறைகேடு. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது

mla arrestரூ.150 கோடி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மகாராஷ்டிரா எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் என்பவர் மகாராஷ்டிர மாநில அரசின் அன்னாபாவ் சாத்தே வளர்ச்சிக் கழகத்தில் ரூ.150 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவரை மாநில குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்

இதுகுறித்து மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரி சஞ்சய் குமார் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “பின் தங்கிய வகுப்பினரின் நலணுக்காக அன்னாபாவ் சாத்தே வளர்ச்சிக் கழகம், மகாராஷ்டிரா மாநில அரசினால் அமைக்கப்பட்டது. இந்த கழகத்தின் தலைவராக ரமேஷ் கடம் நியமனம் செய்யப்பட்டார்.

தனது தலைமையின் கீழ் இயங்கி வந்த இந்த அமைப்பில் பின்தங்கிய வகுப்பினரின் நலனுக்காக அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.150 கோடியை, ரமேஷ் கடம், தனது பெயருக்கு முறைகேடாக மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த முறைகேடு தொடர்பாக ரமேஷை குற்றப் புலனாய்வுப் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று சஞ்சய் குமார் தெரிவித்தார்.
.

Leave a Reply