விவசாயிகள் கடன் தள்ளுபடி! மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு

விவசாயிகள் கடன் தள்ளுபடி! மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் விவசாயிகளைன் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் பல்வேறு முறைகளில் போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது.

இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வரும் மகாராஷ்டிரா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்றும் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பட்நாவிஸ் உறுதி அளித்துள்ளார். முதல்வரின் உறுதிமொழியை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இதனிடையே தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. மகாராஷ்டிர அரசை போல் தமிழக அரசும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply