ரஜினியுடன் மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி சந்திப்பு? அரசியல் ஆலோசனையா?

ரஜினியுடன் மகாராஷ்டிரா முதல்வரின் மனைவி சந்திப்பு? அரசியல் ஆலோசனையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் பல அரசியல் பிரபலங்களை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் உரையாடியும் ஆலோசனை செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று மும்பையில் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அரசியல் குறித்து இருவரும் ஆலோசனை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறிய அம்ருதா, ‘சமூக பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்து ரஜினியை சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அம்ருதா ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் ஊழியர், சமூக சேவகர் மற்றும் கிளாசிக்கல் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply