தலைமறைவாகியுள்ள டெல்லி ரிட்டன்ஸ்:
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்ததால் அந்த மாநாட்டில் சென்று திரும்பிய பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் உடனடியாக அரசை அணுகி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த அறிவுறுத்தலை அடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலர் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து சிகிச்சையும் பெற்று வருகின்றனர். ஆனால் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திருப்பிவர்களில் 60 பேர்கள், தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது
மகாராஷ்டிரா அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும் என்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பு தெரிவித்துள்ளது