இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈர்த்த பல சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் முக்கியமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பகத்சிங். இவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜெய்ப்பூர் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி “பகத் சிங், பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு எதிரான குற்றவாளி ஆவார். எனவேதான், அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்கும்படி காந்தியடிகள் கோரவில்லை’ என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பகத்சிங்கின் ஆதரவாளர்கள் துஷார் காந்திக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜன் ஜாக்ருதி மஞ்ச் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் கிஷன் லால் என்பவர் துஷார் காந்தியின் மீது புகார் தெரிவித்ததாகவும், அவருடைய புகாரின் அடிப்படையில் துஷார் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் காவல் சரகத்தின் ஆய்வாளர் பிமல் காந்த் நேற்று தெரிவித்தார்.