மதனை இறுக்கும் போலீஸ். கலக்கத்தில் பினாமிகள்

மதனை இறுக்கும் போலீஸ். கலக்கத்தில் பினாமிகள்

madhanவேந்தர் மூவீஸ் மதன் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள், நண்பர்கள், கூட்டாளிகள், தெரிந்தவர்களின் பட்டியல் தற்போது போலீஸாரிடம் உள்ளது. அவர்கள் மீதும் போலீஸார் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்ற தகவல் சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் சமீபத்தில் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். மதனைக் கைது செய்து திருப்பூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது சில கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்திடம் பணம் கொடுத்ததாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததை கேட்டனர். அதற்கு மதன், பணம் கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக இருந்தபோது வடமாநிலங்களில் வாங்கிய வீடு, இடம், கார். திருப்பூர், கேரளாவில் வாங்கிய சொத்துக்கள் விவரங்களை சேகரித்துள்ளோம். மேலும் மதனின் பணம், யாரிடம் இருக்கிறது என்றும் விசாரித்து வருகிறோம். அதில் எங்களுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது சொத்துக்கள் பினாமி பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பினாமி குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளோம். அவர்களில் முக்கிய வி.ஐ.பிக்கள் இருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன் வாங்கிய சொத்துக்களை முடக்கவும், அவர் பதுக்கி வைத்திருக்கும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதனின் கணக்கு விவரங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply