பாதங்களுக்கு அழுத்தம் கிடைக்காமல், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அழுத்தம் அதிகமாக ஏற்படும்போதுதான் ஆணிக்கால் உருவாகிறது.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆணிக்கால் உருவாகும் வாய்ப்பு அதிகம். பாதத்தில் இருக்கும் கொழுப்பு நகர்வதால் பாதத்தின் வடிவம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறிது மாறும். இதனால் பாதத்தின் எலும்புக்கும் தரைக்கும் நடுவில் உள்ள தோல் மாட்டிக்கொண்டு தடிமனாகிவிடும். இதுதான் ஆணிக்காலாக மாறுகிறது.
இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆணிக் காலுக்கும் சதைக்கும் இடையில் உராய்வு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது நாளடைவில் வெளியில் தெரியாத புண்ணாகவும் மாறலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பிலும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையை இந்த உள் புண் உண்டாக்கிவிடும். அதனால், ஆணிக்காலை சாதாரணமாக நினைக்கக் கூடாது.
ஆணிக்காலுக்கு மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தெருக்களில் ஆணி எடுக்கப்படும் என்று வருபவர்கள் தரம் குறைந்த முறையில் எடுப்பர் இவர்களிடம் சென்று மிகவும் குறைந்த செலவாக இருக்கிறதே அவசரப்பட்டு காலை காண்பிக்ககூடாது மிகுந்த எச்சரிக்கை தேவை.
தகுந்த அறுவை சிகிச்சையின் மூலம் தகுந்த மருத்துவர்கள் ஆலோசனையில்லாமல் இது போல செயல்களில் இறங்க கூடாது.