புதுடில்லியில் நேற்று பகவத் கீதை குறித்த பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பகவத் கீதை அனைத்து மதத்திற்கும் பொதுவான நூல். எனவே இந்த நூலை தேசிய புனித நூலாக விரைவில் அறிவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. இதன் காரணமாக தான் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பகவத் கீதையை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி பரிசளித்தாக தெரிவித்தார். எனவே இதை தேசிய புனித நூலாக அறிவிப்பது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.