‘மேக்யூஸ் ஆப்’ தளம்

maths_2653246f

‘மைக்ரோசாஃப்ட் வேர்ட்’ மென்பொருளை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஆனால் வேர்டில் உள்ள பல அம்சங்களை நீங்கள் அறியாமல் இருக்கலாம். உதாரணமாக வேர்டில் டைப் செய்யும்போது கணித சூத்திரங்களைச் சரி பார்க்க அதில் உள்ள ஆட்டோ கரெக்ட் அம்சம் கைகொடுக்கிறது தெரியுமா?

ஆட்டோ கரெக்ட் அம்சம், எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றைச் சரி பார்க்க உதவுகிறது. இந்த அம்சத்திலேயே ‘மேத் ஆட்டோ கரெக்ட்’ எனும் வாய்ப்பும் உள்ளது. பைல் மெனு மூலம் ஆட்டோ கரெக்ட் பகுதிக்குச் சென்று இந்த வசதியை இயக்கிவிட்டால் அதன் பிறகு கணிதச் சமன்பாடுகளுக்கான குறியீடுகளை மிக எளிதாகப் பயன்படுத்தலாம்.

எண்ணற்ற குறியீடுகளுக்கான குறுக்கு வழி விசை இதில் உள்ளது. குறியீடுகளை எளிதாக இடைசெருக இந்த வசதி கைகொடுக்கும். இந்தப் பட்டியலில் இல்லாத குறியீடுகளை நாமே சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ‘மேக்யூஸ் ஆப்’ தளம் இது பற்றிய விரிவான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. : http://www.makeuseof.com/tag/microsoft-words-math-autocorrect-makes-equations-easier-to-type/

Leave a Reply