மக்கள் திமுக தலைவர் சந்திரகுமாரை தாக்கிய கேப்டன் மன்ற துணை செயலாளர். வேலூரில் பரபரப்பு

மக்கள் திமுக தலைவர் சந்திரகுமாரை தாக்கிய கேப்டன் மன்ற துணை செயலாளர். வேலூரில் பரபரப்பு

chandrakumarசமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதால் அதிருப்தி அடைந்த தேமுதிக தலைவர்களில் ஒருவரான சந்திரகுமார் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறு மக்கள் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேமுதிகவும், மக்கள் தேமுதிகவும் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைக்க சந்திரகுமார் திட்டமிட்டுள்ளார். வேலூரில் இதற்காக மிக விரைவில் இணைப்பு விழா ஒன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.

இணைப்பு விழாவுக்கான பணிகளை சந்திரகுமார் கவனித்து வரும் நிலையில் நேற்று அவர் வேலூருக்கு காரில் சென்றார். அப்போது அவரது காரை வெட்டுவானத்தைச் சேர்ந்த கேப்டன் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஜி.மணிகண்டன் என்பவர் வழிமடக்கி நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த சந்திரகுமாரிடம், விஜயகாந்தால் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, அவரைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய சந்திரகுமார் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கையால் தாக்கியதை சந்திரகுமார் தடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விடவே சந்திரகுமார் தனது ஆதரவாளர்களுடன் காரில் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து ஜி.மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயகாந்தால் ஆளாக்கப்பட்டு பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு அவருக்கு எதிராக பேசிவருவதை நிறுத்திக் கொள்ளும்படி கூறுவதற்காக காரை மறித்தேன். ஆனால் அவர் வாய்க்கு வந்தபடி பேசியதால் தாக்கியதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்ட அக்கட்சியினர், சந்திரகுமாருக்கு எதிராக மனு ஒன்றை அளித்தனர். அதில் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறாகப் பேசுவதை சந்திரகுமார் நிறுத்தச் செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

Makkal DMDK president Chandrakumar attacked

Leave a Reply