எதிர்க்கட்சி இல்லை என்ற மெத்தனம் வேண்டாம், நான் இருக்கின்றேன்: கமல்ஹாசன்

எதிர்க்கட்சி இல்லை என்ற மெத்தனம் வேண்டாம், நான் இருக்கின்றேன்: கமல்ஹாசன்

நேற்று சட்டப்பேரவை கூடியவுடன் எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டதால் இனிமேல் சட்டப்பேரவைக்கு வரப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே சட்டப்பேரவை நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் கேள்வி கேட்க எதிர்க் கட்சிகள் இல்லை என்ற மெத்தனத்துடன் இருக்க வேண்டாம். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் பேரவையில் கேள்வி கேட்க எதிர்கட்சிகள் இல்லை என்ற மெத்தனம் வேண்டாம். மக்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கும் என மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதோடு, பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Leave a Reply