6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் மலாலா

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் மலாலா

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்கிறார்.

தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்ற மலாலா, குணமடைந்த பின்னர் லண்டனில் இருந்து கொண்டே பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் தொடர்ந்து ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். மேலும் ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தலிபான்களால் தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக அவர் இப்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் வந்துள்ளனர். 4 நாள் பயணமாக அவர் வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அவரை தலிபான் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கலாம் என கருதுவதால் அவரது சுற்றுப்பயணம் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் அப்பாசி மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கி காரில் பயணம் செய்யும் காட்சிகளை பாகிஸ்தான் டெலிவி‌ஷன்கள் ஒளிபரப்பின. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Leave a Reply