திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த மலையாள நடிகை

பிரபல மலையாள நடிகை லெனா திருமணமான ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்துள்ளது மலையாள திரைப்பட உலகை அதிர்ச்சியுற செய்துள்ளது.

மலையாள டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை லெனா. இவர் மம்முட்டியுடன் பிக் பி, டாடு கூல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை லெனா, பல வருடங்களாக காதலித்த அபிஷேக்கை சென்ற வருடம் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டேன். ஆனால் திருமணம் ஆனதில் இருந்து எங்களுக்குள் ஒத்துவரவில்லை. எனது சினிமாவுலக முன்னேற்றத்திற்கு அபிஷேக்தான் காரணம் என்றாலும் அவருடன் குடும்ப வாழ்க்கையில் என்னால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. எனவே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி பிரிய முடிவு செய்துவிட்டோம். ஆனாலும் தொழில்முறையான அவருடன் இருக்கும் தொடர்பு நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

விவாகரத்து குறித்து அபிஷேக் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply