மலேசிய விமானம் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் நலம்.

8மலேசியாவின் MH370 விமானம் கடந்த 8ஆம் தேதி முதல் காணாமல் போய் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில் நேற்று மீண்டும் ஒரு மலேசிய விமானத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சியோல் நகருக்கு கிளம்பிய MH066 என்ற விமானத்தில் திடீரென மின்சார சப்ளை செய்யும் கருவி பழுதடைந்ததால் அவசரமாக ஹாங்காங் நகரில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 271 பயணிகள் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை வானில் பறந்து கொண்டிருந்த MH066, விமானத்தின் ஜெனரேட்டர் திடீரென பழுது அடைந்ததால் விமானத்தின் உள்ளே உள்ள மின்சார பொருட்கள் இயங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஹாங்காங் விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமான பைலட் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவசரமாக ஹாங்காங்கில் அதிகாலை 3.00 மணிக்கு தரையிறங்கியது.

ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் செய்திருந்தனர். விமானம் எவ்வித பிரச்சனையும் இன்றி தரையிறங்கியது. பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் சியோல் நகருக்கு பயணப்பட்டனர். இந்த சம்பவத்தால் மலேசியா மற்றும் சியோல் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply