முஸ்லீம் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கூறியிருப்பதற்காக சமீபத்தில் ரிலீஸான ஹாலிவுட் திரைப்படம் NOAH என்ற படத்திற்கு பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்த வரிசையில் நேற்று முதல் மலேசியாவும் இந்தோனேஷியாவும் இணைந்துள்ளது.
கத்தார்,பஹ்ரைன்,எகிப்து, மற்றும் அரபுநாடுகளில் NOAH திரைப்படத்திற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசிய பிலிம் சென்சார்ஷிப் போர்டு தலைவர் Datuk Abdul Halim Abdul Hamid அவர்கள் இன்று அளித்துள்ள பேட்டியில் “முஸ்லீம் மதத்துக்கு எதிரான கருத்துக்கள் இந்த படத்தில் இருப்பதால் மலேசியாவில் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதி மறுத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் இந்த நாடுகளை தவிர உலகம் முழுவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸான NOAH, பெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.