விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தந்தால் கடும் நடவடிக்கை. மலேசிய அரசு எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தந்தால் கடும் நடவடிக்கை. மலேசிய அரசு எச்சரிக்கை

ltteஇலங்கை தமிழர்களுக்காக போராடிய இயக்கமாக இருந்தாலும், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா உள்பட பல நாடுகள் தடை விதித்தன. அதுமட்டுமின்றி ஐ.நா அமைப்பும் தடைவிதித்தது. இந்நிலையில் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மலேசிய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மலேசிய காவல்துறைத் தலைவர் காலித் அபு பக்கர் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். ஐ.நா. உறுப்பு என்று நாடு என்ற முறையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுபவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் இலங்கைத் தூதருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் அடையாளத்தையும் கண்டுபிடித்துவிட்டோம். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மீதி 4 பேரைத் தேடி வருகிறோம் என்றார் அவர்

Leave a Reply