மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வரையில் மாயமாய் மறைந்தது. உலக நாடுகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கடல் பகுதி முழுவதையும் சல்லடை போட்டு தேடியும் விமானம் குறித்து ஒரு சிறுதுறும்பு கூட கிடைக்கவில்லை. எனவே தேடுதல் வேட்டையை நிறுத்துவதாக உலக நாடுகளின் மீட்புக்குழு இன்று அறிவித்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை இதுவரை இந்திய பெருங்கடல் பகுதியில் 4000 மீட்டர் ஆழத்திற்கு சுமார் 50,000 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு தேடப்பட்டுவிட்டதாகவும், இதுவரை நம்பிக்கை தரக்கூடிய எவ்வித தகவல்களும் கிடைக்காததால், தேடுதல் வேட்டையை நிறுத்துவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், புயல்சின்னம் தோன்றக்கூடிய அறிகுறி தெரிவதாலும் மீட்புப்பணியை நிறுத்துவதாக கூறப்படுகிறது.
மீட்புப்பணிக்காக கடல் பகுதிக்குள் சென்றிருந்த அந்தந்த நாட்டுக்கப்பல் மற்றும் ராணுவ விமானங்கள் இன்று நாடு திரும்புகின்றன. MH370 புதிர் கடைசி வரை விடுவிக்காமல் முடிகிறது.