மலேசிய விமானம் கடத்தப்பட்டதா? பிரதமர் நஜிப்ரசாக் அதிர்ச்சி பேட்டி.

malaysia-airlinesகாணாமல் போன மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது என்றும் கடத்தப்பட்ட நபர்கள் விமான தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் இன்று மலேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் கடத்தப்படுவதற்கு முன்பு தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் என்ன காரணத்திற்காக கடத்தப்பட்டது என்பதற்கான கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விமானம் கடத்தப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

சற்று முன்பு இதுகுறித்து பேட்டியளித்த மலேசிய பிரதமர் நஜிப்ரசாக் கூறியபோது, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும்பணியில் 14 நாடுகள் ,43 கப்பல்கள்,58 விமானங்கள் ஈடுபட்டிருப்பதாகவும், மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டை தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் விமானம் தொடர்பான அனைத்து ரேடார் தகவல்களை மலேசிய அரசாங்கித்திடம் பகிர்ந்து கொள்ளும்படியும் மற்ற நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுவரை வந்த தகவலின்படி விமானத்தின் தகவல் தொடர்பை ஒருவர் திட்டமிட்டே துண்டித்திருப்பதாகவும், விமானம் கடத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர், இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நஜிப்ரசாக் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply