மாயமான மலேசிய விமானம் குறித்து புதிய திடுக்கிடும் தகவல்

மாயமான மலேசிய விமானம் குறித்து புதிய திடுக்கிடும் தகவல்

கடந்த 2014-ம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை கூகுள் எர்த் மூலம் தான் கண்டுபிடித்துவிட்டதாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் என்ன ஆனது என்று இன்று வரை தெரியாமல் இருந்தது. இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் இததனால் இந்த விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது..

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளரான பீட்டர் மக்மென் என்பவர் மலேசிய விமானத்தின் சில பாகங்களை கூகுள் எர்த் மூலம் தான் கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்துள்ளார். அவருடைய கணக்குப்படி விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது

Leave a Reply