ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் மேற்கே உள்ள இந்திய பெருங்கடலில் மிதக்கும் பொருட்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என தெரிய வந்ததும் விமானம் விபத்துக்குள்ளகவில்லை என்றும், பயணிகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் நேற்று மலேசிய அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மலேசிய பிரதமர் விமானத்தை தேடுவது குறித்து அடுத்தகட்ட ஆலோசனை செய்ய ஆஸ்திரேலியா விரைகிறார்.
ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அப்பாட் அவர்களின் அழைப்பிற்கு இணங்க நாளை ஆஸ்திரேலியா செல்லும் மலேசிய பிரதமர் நாஜிப் ரஸ்ஸாக், ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் ஜான்சன் அவர்களுடன் ஆலோசனை செய்கிறார். மேலும் கடலில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக கூறப்படும் இடத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், “விமானத்தின் பயணம் செய்த பயணிகளுக்கு உரிய பதில் அளிப்பது நம்முடைய கடமை, விமானத்தின் இருப்பிடம் குறித்து தேடி கண்டுபிடிப்பதில் ஆஸ்திரேலிய தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் மலேசியாவிற்கு வழங்கும் என்று கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் டேவிட் ஜான்சன் கூறும்போது “விமானத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க ஆஸ்திரேலிய அரசு அதிகபட்சமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சிறிதும் தயங்காது” என்று கூறினார்.