மாலத்தீவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை திடீரென விலக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
சமீபத்தில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் பயணம் செய்த சொகுசுப் படகில் வெடிகுண்டு வெடித்து, அதிபரின் மனைவி படுகாயம் அடைந்தார் என்பது இந்த குண்டுவெடிப்பில் அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த வழக்கில், மாலத்தீவு துணை அதிபர் அகமது அதீப் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதிபரை கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த 4ஆம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக மாலத்தீவு அரசு அதிரடியாக அறிவித்தது.
ஆனால் தற்போது மாலத்தீவில் அமைதி நிலை திரும்பியதால், ஒரே வாரத்தில் அவசரநிலை பிரகடனம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.