மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம். துணை அதிபர் சிறையில் அடைப்பு
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அவர்களை அந்நாட்டின் துணை அதிபரே கொலை செய்ததாக தெரியவந்த நிலையில் அதிரடியாக கடந்த 30ஆம் தேதி துணை அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மாலத்தீவில் அரசுக்கு எதிராக வன்முறை அதிகரித்து வந்தது.
மாலத்தீவின் பல இடங்களில் அரசுக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருவதால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை அங்கு காணப்படுகிராது. மேலும் சமீபத்தில் ஒரு லாரியிலும், தீவில் உள்ள கடற்கரை ரிசார்ட்டிலும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டள. இதனால் நாட்டின் பாதுகாப்பை கருத்து மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிபரின் செய்தி தொடர்பாளர் முவஸ் அஜி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “மாலத்தீவில் அடுத்து வரும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. இது இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தால் பாதுகாப்பு படைக்கு மிதமிஞ்சிய அதிகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.