மாலத்தீவு அதிபரை கொலை செய்ய சதி. ராணுவ அமைச்சர் பதவிநீக்கம்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற போது அவரை கொலை செய்ய சதி நடந்ததாகவும், இந்த சதியில் அதிபர் எவ்வித காயமும் இன்றி தப்பித்துவிட்டாலும், பாதுகாப்பு குளறுபடி செய்த மாலத்தீவு ராணுவ அமைச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளா.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் நாடு திரும்பி மாலி துறைமுகத்துக்கு வந்த போது அவரது படகில் திடீரென குண்டு வெடித்தது. ஆனால் குண்டு வெடிக்கும் முன்பே அதிபர் படகில் இருந்து இறங்கிவிட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயரி பிழைத்தார். ஆனால் அவரது மனைவி மற்றும் 2 பேர் காயம் அடைந்தனர். அதிபரை கொல்வதற்கு மர்ம நபர்கள் வைத்த வெடிகுண்டு வெடித்தது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் அதிபரின் பாதுகாப்பில் குளறுபடி செய்ததற்காக மாலத்தீவு நாட்டின் ராணுவ மந்திரி மூசா அலி ஜலீல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.