மாலத்தீவில் மேலும் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலை: அதிபர் உத்தரவு
மாலத்திவில் கடந்த சில நாட்களுக்கு முன் 15 நாட்கள் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இந்த 15 நாட்கள் தற்போது முடிவுக்கு வருவதை அடுத்து மேலும் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலையை நீட்டித்து மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மாலத்தீவு உச்சநீதிமன்றம் விதித்த ஒரு முக்கிய உத்தரவை அமல்படுத்த மறுத்த அதிபர் அப்துல்லா, கடந்த 5ஆம் தேதி அவசரநிலையை பிரகடனம் செய்தார். இதற்கு பின்னர் நீதிபதிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நெருக்கடி நிலையை நீட்டிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, 15 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என முன்னர் பிறப்பித்த உத்தரவையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.