மாலியில் அவசர நிலை பிரகடனம். அதிபர் அதிரடி அறிவிப்பு

மாலியில் அவசர நிலை பிரகடனம். அதிபர் அதிரடி அறிவிப்பு
mali
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி பிணயக்கைதிகளாக தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டிருந்த 20 இந்தியர்கள் உள்பட 180 பேர்களும் மீட்கப்பட்டனர். இந்த அதிரடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் உள்பட 21 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக  சாத் நாட்டில் நடைபெறும் மாநாட்டிற்குச் செல்லவிருந்த மாலி அதிபர் இப்ராஹிம் பௌபக்கர் கேய்த்தா, உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்தது மட்டுமின்றி உடனடியாக மாலியில் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதிபரின் அவசரநிலை பிரகடனம் காரணமாக மாலியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

English Summary: Mali declares a 10-day state of emergency following hotel attack

Leave a Reply