அல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மாலி பாலைவனத்தில் சிதறிக்கிடக்கின்றது. மாலி அதிபர்

algeria flightமோசமான வானிலை காரணமாக நேற்று விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் வடக்கு மாலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலி நாட்டின் அதிபர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஏர் அல்ஜீரியாவுக்கு சொந்தமான AH5017 என்ற விமானம் ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோ என்ற நாட்டின் தலைநகர் ஒகடாகோ  என்ற நகரத்தில் இருந்து அல்ஜியர்ஸ் என்ற நகரத்திற்கு செல்லும்போது விபத்துக்குள்ளானது. இதில் 110 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் மாலி நாட்டில் கிடைத்திருப்பதாக அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பவ்பாகர கீத்தா இன்று காலை செய்தியாளர்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். மேலும், மாலியின் வடக்குப்பகுதியில்  உள்ள அகுவெல்ஹாக் என்ற பாலைவன பிரதேசத்திலும், கிடல் என்ற பகுதியிலும் விமானம் நொறுங்கி விழுந்து கிடப்பதாக அவர் கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான இடத்திற்கு தான் விரைந்து செல்லவிருப்பதாகவும், ஏற்கனவே மீட்புப்படையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply