இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் பார்க்க வருவேன். விஜய் மல்லையா

இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் பார்க்க வருவேன். விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி அளவிற்கு கடன் பெற்றுவிட்ட் அந்த கடனை கட்டாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிய பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா -பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்தார். இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பு ஆனது. இந்திய வங்கியை ஏமாற்றிய ஒருவர் இந்தியா விளையாடும் போட்டியை பார்க்க வந்துள்ளார், இந்திய அரசால் என்ன செய்ய முடிந்தது? என்று ஊடகங்கள் விமர்சனம் செய்தன

இந்த நிலையில் ”இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்வையிட நான் வருகை தந்ததை அனைத்து ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு இருந்தது. இந்திய அணியை மகிழ்விக்க நான் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பதாக உள்ளேன்” என்று தனது டுவிட்டரில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். எனவே அடுத்தடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளையும் அவர் பார்க்க வருவார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவுக்கே சவால் விடும் வகையில் நடந்து கொள்ளும் விஜய்மல்லையாவை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply