மலையாள சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டிய விஜய்யின் ‘தெறி’
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி படம் என்றாலே கேரளா முழுவதும் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவருடைய படங்கள் ரிலீஸ் ஆகும்போது மற்ற நடிகர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய மாட்டார்கள்.
இந்நிலையில் மம்முட்டி படம் ஒன்று தற்போது இன்னொரு நடிகரின் படத்திற்காக ஒருவாரம் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. அந்த நடிகர் இளையதளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையதளபதி விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி தமிழகத்தை போல கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் போட்டி போட்டு வருவதால் இதே தேதியில் ரிலீஸ் ஆகவிருந்த மம்முட்டியின் ‘ஒயிட்’ திரைப்படத்திற்கு முன்னணி தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ‘ஒயிட்’ ரிலீஸ் ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டாரையே விஜய்யின் ‘தெறி’ ஓரங்கட்டப்பட்ட சம்பவம் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.