முன்னாள் மேற்குவங்க ஆளுனர் சென்னையில் தாக்கப்பட்டார். பெரும் பரபரப்பு

முன்னாள் மேற்குவங்க ஆளுனர் சென்னையில் தாக்கப்பட்டார். பெரும் பரபரப்பு
mk narayanan
முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் இன்று சென்னையில் தாக்கப்பட்டார். அவரை தாக்கிய நபரை போலீஸார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர் எதனால் தாக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் கடந்த 2005ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். ஒன்பது வருடங்களாக அந்த பதவியில் இருந்த அவர் பின்னர் மேற்குவங்க ஆளுனராக பதவியேற்க வசதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், எம்.கே.நாராயணன் நேற்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை திடீரென மர்ம மனிதர் ஒருவர் செருப்ப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எம்.கே.நாராயணன் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியையச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது

Leave a Reply