முதல்வர் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபர் கைது.

முதல்வர் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபர் கைது.
knife
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது குடும்பத்தினர்களுடன் பெங்களூரில் வசித்து வரும் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபர் ஒருவரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இவர் முதல்வரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இன்று காலை முதல்வரிடம் மனுகொடுக்க அவரது வீட்டில் பலர் காத்திருந்தனர். அவ்வாறு மனு கொடுக்க வருபவர்களை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஒருவருடைய பையில் துருப்பிடித்த கத்தி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை கைது செய்து ஹை கிரவுண்ட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் லிங்கராஜூ என்றும் அவருக்கு 54 வயது என்றும் தெரியவந்தது. மேலும் அவர் மனநிலை பாதித்தது போன்று பல கேள்விகளுக்கு பதில் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் கூறிய பதில்களில் ஒன்று தன்னை யாரோ ஒருவர் ஹெலிகாப்டர் ஒன்றில் முதல்வர் வீட்டில் இறக்கி விட்டதாக கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

English Summary: Man attempts to enter Karnataka CM’s residence with knife

Leave a Reply