நியூசிலாந்தில் சோலார் பவரில் இயங்கும் புதுமையான வீடு.

நியூசிலாந்தில் சோலார் பவரில் இயங்கும் புதுமையான வீடு.

solar houseபடத்தில் நீங்கள் காண்பது ஏதோ பில்லர் அல்லது கலங்கரை விளக்கம் என நினைக்க வேண்டாம். நியூசிலாந்து நாட்டு நபர் ஒருவர் கட்டிய வீடுதான் அது. இந்த வீட்டிற்கு மின்சார இணைப்பே கிடையாது. பிறகு எப்படி இந்த வீட்டிற்கு மின்சாரம் கிடைக்கும் என்று கேட்பவருக்கு இந்த வீட்டை கட்டியவர் கூறும் பதில், இந்த வீடு முழுக்க முழுக்க சோலார் பவரில் இயங்குகிறது என்பதுதான்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 28 வயது ஜோனோ வில்லியம்ஸ் என்பவர் கட்டிய இந்த வீடு முழுக்க முழுக்க இரும்புகள் மற்றும் கண்ணாடிகளால் ஆனது. இந்த வீடு தரையில் இருந்து பத்து மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் வைஃபை, வயர்லெஸ் சவுண்ட் சிஸ்டம், ஃபிங்கர் பிரிண்ட் எண்ட்ரி, புரொஜக்டர், எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப உபகரணங்களும் சோலார் பவரில் இயங்குகின்றது.

இந்த வீட்டை கட்டி முடிப்பதற்கு $67,000 செலவானதாக அவர் கூறியுள்ளார். செங்கல், சிமிண்ட் ஆகியவை எதுவும் இன்றி சகலவசதிகளுடன் சோலார் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை தினமும் நூற்றுக்கணக்கானோர் பார்வையிட வருகின்றனர். இந்த வீடு மணிக்கு 60கிமீ வேகத்தில் வீசும் புயல்காற்றையும் தாங்கும் அளவுக்கு சக்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மரம் போன்று இருக்கும் இந்த வீடு பலரையும் கவர்ந்துள்ளதால், இதுபோன்ற வீடு இன்னும் பல விரைவில் கட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply