‘செம கட்டை’ என்று இளம்பெண்ணை வர்ணித்த சென்னை வாலிபருக்கு தர்ம அடி

‘செம கட்டை’ என்று இளம்பெண்ணை வர்ணித்த சென்னை வாலிபருக்கு தர்ம அடி

சாலையில் செல்லும் இளம்பெண்களை கேலி செய்வதற்கென்றே ஒரு கூட்டம் இருந்து வரும் நிலையில் சென்னையில் கேரள பெண் ஒருவரை ‘செம கட்டை’ என்று வர்ணித்த வாலிபர் ஒருவருக்கு தர்ம அடி விழுந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி ஸ்ருதி கேரளாவைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாலை கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றபோது எதிரே வந்த சென்னை வாலிபர் ஒருவர் அவரை பார்த்து, ‘செம கட்டை’ என சத்தமாக வர்ணித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ருதி, உடனே அந்த இளைஞரை துரத்தி பிடித்து அடித்தார். ஸ்ருதிக்கு ஆதரவாக அங்கு கூடிய பொதுமக்களும் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் பெயர் மணி (என்றும், திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த அவர், கேளம்பாக்கத்தில் தங்கி டிரைவராக பணிசெய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மணியிடம் போலிசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply