6 வருடங்களாக மனிதனின் மூளைக்குள் குடியிருந்த புழு. லண்டன் டாக்டர்கள் அதிர்ச்சி.

o-WORM-BRAIN-TISSUE-570 பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் சீன வம்சாவளியை சேர்ந்த ஒருவருடைய மூளைக்குள் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்புகுந்த புழு ஒன்று அவருக்கு தீராத தலைவலியை கொடுத்து கொண்டு வந்திருந்ததை அந்நாட்டு மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் தீராத தலைவலி, வலிப்பு நோய், ஞாபக மறதி மற்றும் காதுகள் வழியாக அருவருத்தக்க வாசனை வெளிவருதல் ஆகிய நோய்களால் அவதிப்பட்டு ஒருவருக்கு டாக்டர்கள் பலவித சிகிச்சைகள் கொடுத்தும் குணமாகவில்லை. இறுதியில் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை முதல் கால் வரை முழு உடல்சோதனை செய்யும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. எச்ஐவி, எபோலா உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையில் அவரது மூளைக்குள் கடந்த 6 வருடங்களாக 10 செ.மீ. நீளமுள்ள ஒட்டுண்ணி ரக நாடா புழு ஒன்று குடியிருந்து வந்ததை எம்ஆர்ஐ பரிசோதனையில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், அவருக்கு நேற்று முன்தினம் மூளையில் அறுவை சிகிச்சை செய்து, 10 செ.மீ. நீள நாடா புழு அகற்றப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது. ஒருவர் பச்சையாக மாமிசங்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் சுட்டு தின்னும்போது, இத்தகைய ஒட்டுண்ணி ரக நாடா புழு மனிதனின் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மனிதனின் மூளைக்குள் கடந்த 6 வருடங்களாக நாடா புழு விளையாடியதை தற்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம் என்று டாக்டர் எப்ரோஸ்சைனி கிக்ரானியா க்ளோட்சாஸ் கூறினார்.

tapewormbrainyears

Leave a Reply