ஆணுறை இயந்திரத்தால் பலியான வாலிபர். கிறிஸ்துமஸ் நாளில் நடந்த துயரம்
ஜெர்மனி மற்றும் டச்சு நாடுகளுக்கு இடையிலான ஸ்கோப்பின்கென் என்ற நகரை சேர்ந்த ஒருவர் தானியங்கி ஆணுறை மிஷினில் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக பலியானார்.
ஸ்கோப்பின்கென் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிறிஸ்துமஸ் செலவுக்கு பணம் இல்லாததால் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தானியங்கி ஆணுறை மிஷினில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த இயந்திரத்தின் பூட்டை உடைப்பது கடினம் என்பதால் வெடிமருந்தை பூட்டில் திணித்து தகர்த்து, உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் தேவையை விட அதிகமான அளவில் வெடிமருந்தை வைத்து விட்டதால், அந்த தானியங்கி ஆணுறை இயந்திரத்தின் கனத்த இரும்பினாலான மேல்மூடி வெடித்து சிதறி அந்த வாலிபரின் தலையில் விழுந்தது. இதனால், மண்டை பிளந்து மயக்கமடைந்து கீழே விழுந்த அந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் பலியான வாலிபரின் இரண்டு நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.
Chennai Today News: Man dies after blowing up condom machine