12 வயதில் பலாத்காரம், 19 வயதில் திருமணம், 33 வயதில் விவாகரத்து,. அமெரிக்க இளைஞனின் வித்தியாசமான வாழ்க்கை
அமெரிக்காவை சேர்ந்த வில்லி ஃபுலாலு என்பவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. ஆனால் இவருக்கு 12 வயதாக இருந்தபோது இவரை இவரது ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அப்போது அந்த ஆசிரியைக்கு வயது 33
ஐந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்தபோது, சட்டசிக்கல் ஏற்பட்டது. இதன்பேரில், மாணவனை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, மேரிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த மேரியை 19 வயதில் வில்லி ஃபுலாலு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில வருடங்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது 33 வயதில் தனது டீச்சரும் மனைவியுமான மேரியை விவாகரத்து செய்துவிட்டார். வில்லிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததே இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.