மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் 60 கிமீ மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று அவரே மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஜூவாசிலா நூன்ஸ் என்பவரின் வீட்டில் திடீரென புகுந்த திருடர்கள் அவரை தாக்கிவிட்டு அவருடைய வீட்டை கொள்ளையடித்தனர். இந்த தாக்குதலில் ஒரு திருடனின் ஜுவாசிலாவின் தலையில் கத்தியால் குத்தினான். கத்தி அவருடைய தலையின் உள்ளே 30செமீ உள்ளே சென்றது. இதனால் அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
சில நிமிடங்கள் கழித்து மயக்க நிலையில் இருந்து தெளிந்த அவர் தன்னுடைய தலையில் குத்தப்பட்டிருந்த கத்தியை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் அவரால் முடியாததால், உடனே தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரே டிரைவ் 60 கிமீ டிரைவ் செய்து மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
அவருடைய இக்கட்டான நிலையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளனர். தற்போது ஜுவாசிலா உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.