உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மொபைல் போனை காதில் இருந்து எடுக்காத வாலிபர். அதிர்ச்சி வீடியோ

mobileமனிதர்களின் வாழ்வில் தற்போது மொபைல்போன் என்பது உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பு போல மாறிவிட்டது. ஒருவர் வெளியே செல்லும்போது எதை வேண்டுமானாலும் மறப்பார். ஆனால் மொபைல் போனை மறக்க மாட்டார். மொபைல் போன் பேசிக்கொண்டே பயணம் செய்வது, சாப்பிடுவது மற்றும் பல வேலைகளை செய்வது என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. ஒருசிலர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தங்கள் மொபைல்போனை காதில் இருந்து எடுப்பதில்லை என்பதுதான் வேதனை.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒஹியோ நகரில் ஒருவர் மொபைல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அவரது எதிரிகள் கொலை செய்யும் நோக்கத்தில் அவரை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். உடனடியாக சுதாரித்து கொண்ட அந்த நபர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தனது எதிரிகளை நோக்கி சுட்டார். சில நிமிடங்கள் இந்த துப்பாக்கி சண்டை நடுவீதியில் நடந்தது.

இதில் ஒரு அதிசயத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் எதிரிகளை துப்பாக்கியை எடுத்து சுடும்போது அவர் தனது காதில் இருந்து செல்போனை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செல்போனில் தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டே எதிரிகளின் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பித்ததோடு அவர்களை நோக்கியும் சுட்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/watch?v=-8SkwK3BL0M

Leave a Reply