மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நபருக்கு போலீஸ் எச்சரிக்கை

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நபருக்கு போலீஸ் எச்சரிக்கை

பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய் குறித்து உலகெங்கிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து பிரச்சாரம் செய்த நபர் ஒருவரை எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள அலபமா மாகாணத்தில் நடந்துள்ளது. பிரைன் ஸ்டட்டர்ட் என்பவர் தனது தந்தையாரின் 99வது பிறந்த நாளை அங்குள்ள ஓட்டல் ஒன்றில் கொண்டாடினார். அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் ‘பிரஸ்ட் மேட்டர்ஸ்’ என்ற எழுத்துக்களும் பெண்களின் மார்பகங்கள் படம் ஒன்றும் இருந்தது.

இந்த படம் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக பலர் கருது ஓட்டல் நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். உடனே ஓட்டல் நிர்வாகிகள் காவல்துறையினர்களிடம் புகார் செய்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, பிரைன் ஸ்டட்டர்ட் இந்த டிசர்ட்டை மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சிக்காக அணிந்ததாக கூறினார். ஆனால் போலீசார் அவர்களை இதுபோன்ற டீசர்ட்டுக்களை இனிமேல் அணியக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply