27 வருடங்கள் சிறைதண்டனை அனுபவித்த அப்பாவிக்கு ரூ.110 கோடி இழப்பீடு

27 வருடங்கள் சிறைதண்டனை அனுபவித்த அப்பாவிக்கு ரூ.110 கோடி இழப்பீடு
jail
செய்யாத குற்றத்திற்காக 27 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த அப்பாவி ஒருவருக்கு $16.65 மில்லியன் டாலர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.110 கோடி ஆகும்.

கொலம்பியா மாகாணத்தில் கற்பழிப்பு மற்றும் கொலை செய்ததாக Donald Eugene Gates என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. இதனால் கடந்த 27 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போது 64 வயதாக இருக்கும் Donald Eugene Gates நிரபராதி என்று தெரிய வந்துள்ளது.

இதனால் கடந்த 1981ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டார். குற்றமே செய்யாமல் 27 வருடங்கள் சிறையில் வாடிய அவருக்கு தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் தற்போது அவருக்கு $16.65 மில்லியன் டாலர் இழப்பீடாக கொடுக்க கொலம்பியா அரசு நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

27 வருடங்களுக்கு பின்னர் தனக்கு நீதி கிடைத்ததாகவும், இந்த பணத்தை வைத்து கொண்டு மீதி நாட்களை சந்தோஷமாக கழிக்கவுள்ளதாகவும் Donald Eugene Gates கூறியுள்ளார்.

English Summary: Man to receive $16m after fabricated evidence sent him to prison for 27 years

Leave a Reply